3rd of April 2014
சென்னை::லட்சுமி மேனன் ஆரம்பத்தில் இரண்டு மலையாளப் படங்களில் நடித்ததோடு சரி.. அதற்கப்புறம் தமிழ் மட்டும் தான்.. தமிழில் எல்லா முன்னணி இளம் ஹீரோக்களுடனும் நடிக்கிறார். பிஸியாகத்தான் இருக்கிறார்.. ஆனாலும் தாய்மொழி பாசம் விட்டுவிடுமா..?
அதனால் இப்போது கொஞ்சம் மனமிறங்கி மலையாளப் படம் ஒன்றில் நடிக்க ஓகே சொல்லிவிட்டார் லட்சுமி மேனன்.. பின்னே அழைப்பு வந்திருப்பது ஆக்ஷன் படங்களின் சூத்திரதாரியான டைரக்டர் ஜோஷியிடமிருந்து அல்லவா..? அப்புறம் எப்படி மறுக்க முடியும்..?
படத்தின் பெயர் ‘அவதாரம்’. நம்ம ஜனப்ரிய நாயகன் திலீப் தான் கதாநாயகன். திலீப்பும் ஜோஷியும் இணையும் ஏழாவது படம் இது. இந்தப்படத்தில் மணிமேகலா என்கிற இன்சூரன்ஸ் ஏஜெண்ட் கேரக்டரில் நடிக்கிறார் லட்சுமி மேனன். இதன் படப்பிடிப்பு துவங்கி விட்ட்து....
Comments
Post a Comment