29th of April 2014
சென்னை::புதுமுக நடிகருடன் காதலா என்றதற்கு கோபம் அடைந்தார் ஹன்சிகா. ‘காதலிக்க இப்போது நேரமில்லை என்று சலித்துக் கொண்டார்.சிம்புவுடனான காதல் முறிந்தபிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் ஹன்சிகா. இந்நிலையில் நடிகை ஜெயப்பிரதாவின் உறவினரும், ‘உயிரே உயிரே பட ஹீரோவுமான சித்தார்த்துடன் ஹன்சிகா காதல் வயப்பட்டிருக்கிறார் என்று தகவல் வெளியானது.
இது பற்றி ஹன்சிகா கூறும்போது, ‘சித்தார்த்துடன் காதல் என்பது அடிப்படையற்றது. அவர் சக நடிகர். அவ்வளவுதான். கடந்த 6 மாதத்துக்கு முன்பே அவருடன் நடித்தபட ஷூட்டிங் முடிந்துவிட்டது. அதன்பிறகு சித்தார்த்துடன் நான் பேசவில்லை. அடுத்த சில வருடங்களுக்கு நடிப்பில் மட்டுமே நான் கவனம் செலுத்த உள்ளேன். இப்போதைக்கு 9 படங்களில் நடித்து வருகிறேன். காதலிக்க எனக்கு நேரமில்லை. பிஸியாக இருக்கும் இத்தருணத்தில் கேமரா மீது மட்டுமே எனக்கு காதல் உள்ளது என்றார்..
Comments
Post a Comment