வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை நினைத்து டென்ஷனில் இருக்கிறாராம் சந்தானம்!!!

22nd of April 2014
சென்னை::முன்னணி ஹீரோக்கள் நடித்த பல படங்களின் வெற்றிக்கு சந்தானத்தின் காமெடி காரணமாக இருந்திருக்கிறது. ஆனாலும் முதன்முறையாக தான் கதாநாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை நினைத்து டென்ஷனில் இருக்கிறாராம் சந்தானம்.

விரைவில் வெளிவரவிருக்கும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் முன்னோட்டம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இப்படத்தின் முன்னோட்டத்துக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. சமீபத்தில் வெளியான படங்களிலேயே மிக அதிகஅளவில் வரவேற்கப்பட்ட முன்னோட்டம் இதுதான் என்கிறார்கள் திரையுலகினர்.

கடந்த 14 ஆம் தேதி அன்று வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் முன்னோட்டம் யுட்யூபில் வெளியிடப்பட்டது. ஐந்தே நாட்களில் ஐந்து லட்சத்தையும் தாண்டி பார்வையாளர்கள் எண்ணிக்கை எகிறிக் கொண்டிருக்கிறது.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் முன்னோட்டத்துக்குக் கிடைத்த அபரிமிதமான இந்த வரவேற்பு ஹீரோ சந்தானத்துக்கு தெம்பை அளித்திருக்கிறதாம். இன்னொரு பக்கம், சந்தானத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு திரைஉலகினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

ரசிகர்களுக்கு சிரிப்பை உத்திரவாதம் அளிக்கும் சந்தானம், அதே சிரிப்பை வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் திரை உலக வர்த்தகத்தினருக்கும் அளிக்க சிரத்தையோடு உழைக்கிறாராம்.
பார்றா..!.
’’

Comments