அஜீத் பாணியில் யூனிட்டுக்கே விருந்து கொடுக்கும் ப்ரியா ஆனந்த்!!!!

8th of April 2014
சென்னை::தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களின் படப்பிடிப்பின் போதும், மொத்த யூனிட்டுக்கும் ஓரிரு முறையாவது தனது வீட்டில் தனது கையால் சமைத்த உணவுகளை கொண்டு வந்து விருந்து பரிமாறுவார் அஜீத். அவரைத் தொடர்ந்து, தன்னுடன் நடிக்கும் நடிகர்-நடிகைகளுக்கு தனது அம்மா கைப்பக்குவத்தில் செய்யும் பிரியாணி விருந்தினை வீட்டுக்கு அழைத்து சென்று கொடுத்து வருகிறார் ஆர்யா.
 
இவர்களைத் தொடர்ந்து இப்போது எதிர்நீச்சல் ப்ரியா ஆனந்தும், இந்த விருந்து கலாசாரத்தை பின்பற்றத் தொடங்கியிருக்கிறார். அதுவும் ஆர்யா மாதிரி அம்மா சமைத்ததை கொடுக்காமல், அஜீத் பாணியில் தனது கையால் சமைக்கும் உணவுகளையே விருந்தாக கொடுக்க முடிவு செய்திருக்கிறார்.
 
அதற்காக, ஒரு சமையல் கலை வல்லுனரிடம் முறையான பயிற்சி எடுத்துள்ள ப்ரியா ஆனந்த், தற்போது தான் நடித்து வரும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படக்குழுவுக்கு முதன்முறையாக விருந்து கொடுக்க முடிவு செய்திருக்கிறாராம். முக்கியமாக பட நாயகனான விமல், பிரியாணி விருந்துதான் வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால், சக கலைஞர்களுக்கு முதன்முதலாக பிரியாணி விருந்து கொடுக்கப்போகிறாராம் ப்ரியாஆனந்த்..
 

Comments