ஹேப்பி பர்த்டே ட்டூ சிம்ரன்!!!!

4th of April 2014
சென்னை::சிம்ரன்.. அழகு, நடிப்பு என இரண்டையும் ஒரு சேர பெற்றவர். இந்தி, மலையாளம், தெலுங்கு என மற்ற மொழிகளில் நடித்துவிட்டுத்தான் தமிழுக்கு வந்தார். தமிழ்சினிமாவும் இவரை முன்னணி நடிகையாக்கி அழகு பார்த்தது.

இவர் தமிழில் அறிமுகமானபோது ‘ஒன்ஸ்மோர்’, ‘வி.ஐ.பி’, ‘பூச்சூடவா’, என மூன்று படங்கள் இவர் தங்களது அறிமுகம் தான் என உரிமை கொண்டாடிய அதிசயமும் நடந்தது. தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா என இளம் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர் கமலுடனும் இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்தார்.

ரஜினி மற்றும் விக்ரம் இருவருடன் நடிக்கவில்லை என்கிற குறையைத்தவிர இவரது சினிமா பயணம் திருப்திகரமாகவே அமைந்தது. இன்று பிறந்தநாள் காணும் சிம்ரனுக்கு poonththalir-kollywood  தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Comments