அஜீத் பிறந்த நாளில் சூர்யா பட டிரைலர்!!!

28th of April 2014
சென்னைஅஜீத் பிறந்த நாளன்று சூர்யா படத்தின் டிரைலரை வெளியிட படு பிஸியாக இயங்கி வருகிறது லிங்குசாமி பட குழு.சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘அஞ்சான் படத்தை லிங்குசாமி இயக்கி வருகிறார். சமந்தா ஹீரோயின். இதன் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்துவிட்டது.
 
குறிப்பாக சமந்தா காட்சிகள் வேகமாக படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலரை அஜீத் பிறந்த நாளான மே 1ம் தேதியன்று ரிலீஸ் செய்வதற்காக பட குழு படுவேகமாக சுழன்றுக்கொண்டிருக்கிறது. சூர்யா பட டிரைலரை அஜீத் பிறந்தநாளில் வெளியிடுவது ஏன்? என்பதற்கு பட குழுவினரிடமிருந்து சரியான பதில் வராதபோதிலும் அன்றையதினம் டிரைலர் ரிலீஸ் செய்ய உள்ளது உண்மைதான் என தயாரிப்பாளர் யுடிவி தனஞ்செயன் கூறி இருக்கிறார்.
 
இது பற்றி அவர் கூறும்போது, ‘அஞ்சான் பட குழு படத்தின் முதல் டிரைலரை மே 1ம் தேதி வெளியிடுவதற்கு கடினமாக உழைத்து வருகின்றனர். இதுவரை பார்த்திராத அசத்தும் தோற்றத்துடனும், ஸ்டைலான நடிப்பிலும் சூர்யாவை அனைவரும் பார்க்கப்போகிறீர்கள் என்றார்..
 

Comments