தேவை ஒரு ஹிட்டுப்படம் : லிங்குசாமியை தேடிப்போன கார்த்தி!!!

19th of April 2014
சென்னை::எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல யாருடைய டைரக்‌ஷனில் நடித்தான் ஹிட்டு படம் கொடுக்கலாம் என்பது தான் இப்போதைய மாஸ் ஹீரோக்களின் கவலை. நடிகர் கார்த்திக்கும் இப்படிப்பட்ட ஒரு மோசமான சூழலில் தான் மாட்டிக் கொண்டிருக்கிறார்.
 
அவரும் ஹிட் படங்களை கொடுத்த டைரக்டர்களின் படங்களில் அடுத்தடுத்து நடித்து பார்த்து விட்டார். ஆனால் அந்தப் படங்கள் எல்லாமே ப்ளாப் தான். கடைசியாக வெங்கட்பிரபு டைரக்‌ஷனில் நடித்த பிரியாணி படமும் ப்ளாப் லிஸ்ட்டில் சேர்ந்து விட்டதால் அடுத்து யாருடைய டைரக்‌ஷனில் நடிப்பது என்று குழப்பத்துடன் இருந்தார். தற்போது அட்டக்கத்தி ரஞ்சித் டைரக்‌ஷனில் நடித்து முடித்து விட்ட கார்த்தி அடுத்து லிங்குசாமியுடன் இணைந்திருக்கிறார்.
 
கார்த்தியின் இந்த புதிய படத்தை தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறார் லிங்குசாமி. தற்போது சூர்யா, சமந்தா நடிப்பில் ‘அஞ்சான்’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் லிங்குசாமி,  ஆகஸ்ட் 15ம் தேதி அதை ரிலீஸ் செய்து விட்டு உடனடியாக கார்த்தி நடிக்கும் படத்தை ஆரம்பிக்கிறார்.
‘பையா’ படத்திற்குப் பின்பு கார்த்தி – லிங்குசாமி இணையும் இந்த படத்துக்கு எண்ணி ஏழுநாள் என்று டைட்டில் வைத்திருக்கிறார்.
 

Comments