தேவயானி பேச்சை மீறி நடிக்க வந்த ராஜகுமாரன்!!!

15th of April 2014
சென்னை::தேவயானி பேச்சை மீறி காமெடி வேடத்தில் நடிக்க வீட்டைவிட்டு வெளியேறினார் ராஜகுமாரன்.விண்ணுக்கும் மண்ணுக்கும், நீ வருவாய் என போன்ற படங்களை இயக்கியவர் ராஜகுமாரன். நடிகை தேவயானியை காதலித்து மணந்தார். கடந்த ஆண்டு ‘திருமதி தமிழ் படத்தில் ஹீரோவாக நடித்தார் ராஜகுமாரன். அதன்பிறகு வேறு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் சந்தானம் தான் ஹீரோவாக நடிக்கும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்என்ற படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க ராஜகுமாரனை கேட்டார். இதையறிந்த தேவயானி, ‘காமெடி வேடத்தில் நடிக்கக்கூடாது. எல்லோரும் கிண்டலாக பேசுவார்கள் என்று தடைவிதித்தார்.

ஆனால் அவரது பேச்சை மீறி வீட்டிலிருந்து வெளியேறிய ராஜகுமாரன், சந்தானம் படத்தில் காமெடி வேடத்தில் நடித்தார்.இதுபற்றி நேற்று நடந்த ஆடியோ விழாவில் சந்தானம் கூறும்போது,‘கடந்த ஆண்டு கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் பவர் ஸ்டார் காமெடி வேடத்தில் நடித்தார். இப்படத்தில் ராஜகுமாரனை காமெடி வேடத்தில் நடிக்க கேட்டபோது முதலில் மறுத்தார். ‘உன்னை சந்தானம் ரொம்ப கிண்டலடிப்பார். அவர் படத்தில் நடிக்காதீர்கள் என்று வீட்டில் உள்ளவர்கள் கூறி இருக்கிறார்கள். இதை என்னிடம் ராஜகுமாரன் கூறியபோது, நான் கிண்டலடித்தால் நீங்களும் பதிலுக்கு கிண்டலடிக்கலாம் என்று சொன்னேன். இதையடுத்து பெட்டிபடுக்கையுடன் திடீரென்று என் ஆபிசுக்கு வந்த ராஜகுமாரன் காமெடி வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். சோலார் ஸ்டார் என்ற பட்டத்துடன் அவர் இதில் நடிக்கிறார்‘ என்றார். படத்தில் நடித்த அனைவரும் விழாவுக்கு வந்திருந்தனர். ராஜகுமாரன் மட்டும் வரவில்லை....

Comments