23rd of April 2014
சென்னை::சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க 'நான் ஈ' வில்லன் சுதீப் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்' படத்தினைத் தொடர்ந்து இயக்குநர் சிம்புதேவன், விஜய் நடிக்கவிருக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தினை தமீன் பிலிம்ஸ் மற்றும் பி.டி.செல்வகுமார் இணைந்து தயாரிக்க இருக்கிறார்கள்.
இப்படத்தில் விஜய்யுடன் நடிக்கும் நாயகி இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஸ்ரீதேவி ஒப்பந்தமானார். தற்போது இப்படத்தில் 'நான் ஈ' வில்லன் சுதீப்பும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இது குறித்து சுதீப் கூறியிருப்பது, "இது ஃபேன்டஸி வகை திரைப்படம். இதில் எனக்களித்திருப்பது இதுவரை நான் நடித்திராத பாத்திரம். இரண்டு வருடங்களுக்கு முன்னர் ’நான் ஈ’ எனக்கு இங்கு ஒரு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தது.
ஆனால், நான் கன்னடப் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தினேன். வெற்றியோ தோல்வியோ, எனக்களிக்கப்பட்ட பாத்திரமும், கதையும் என்னை வசீகரித்தால் போதும்.” என்று கூறியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'கத்தி' படத்தில் நடித்து வரும் விஜய், அதனைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment