கதைக்கு தேவைப்பட்டால் முத்தக்காட்சியில் நடிப்பேன் - லட்சுமி மேனன்!!!!

 3rd of April 2014
சென்னை::கதைக்கு தேவைப்பட்டால் முத்தக்காட்சியில் நடிக்க ரெடி, என்று நடிகை லட்சுமி மேனன் கூறியுள்ளார்.

'கும்கி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான லட்சுமி மேனன், தொடர்ந்து சுந்தரபாண்டியன், குட்டிபுலி, என்று தொடர் வெற்றிப் படங்களில் நடித்தார். இதனையடுத்து, விஷாலுடன் அவர் இணைந்து நடித்த 'பாண்டிய நாடு' படமும் பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் விஷாலுக்கு ஜோடியாக 'நான் சிகப்பு மனிதன்' படத்தில் லட்சுமி மேனன் நடிக்கிறார்.

வரும் ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தில், முத்தக்காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த முத்தக்காட்சியால் தற்போது கோடம்பாக்கமே பரபரப்பு அடைந்துள்ளது. அந்த அளவுக்கு லட்சுமி மேனன், விஷாலுக்கு ரொம்பவே அழுத்தமாக உதட்டில் முத்தம் கொடுத்துள்ளராம். தற்போது இந்த முத்தக் காட்சியால், படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்காமல் போகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதற்கிடையில், நான் சிகப்பு மனிதன் படக்குழுவினர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய விஷால், "இந்த படத்தில் இடம்பெற்றுள்ள முத்தக் காட்சியை பெரிய விஷயமாக அனைவரும் பேசுகின்றனர். ஆனால், இது கதைக்கு தேவைப்பட்டது. படம் பார்க்கும்போது உங்களுக்கே அது புரியும்." என்றார்.

நடிகை லட்சுமி மேனனிடம், கதைக்கு தேவைப்பட்டது என்பதற்காக விஷாலுக்கு முத்தம் கொடுத்தீர்கள், இதையே மற்ற படங்களிலும் செய்வீர்களா? என்று கேட்டதற்கு, "நான் நடிகர்களை பார்ப்பதில்லை கதையை தான் பார்க்கிறேன். அதனால் கதைக்கு தேவை பட்டால் மற்ற ஹீரோகளுக்கும் முத்தம் கொடுப்பேன்." என்றார்....
 

Comments