சென்னை::மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான ‘ட்ராஃபிக்’ படத்தை இயக்கியவர் ராஜேஸ் பிள்ளை. இவர் தற்போது ‘மிலி’ என்ற படத்தை இயக்குகிறார். இதில் பெயரளவுக்கு கதாநாயகி என்றில்லாமல், கதையின் நாயாகியாகவும் நடிக்கிறார் அமலாபால். முழுக்க முழுக்க ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்தப்பட்த்தில் அமலாபாலுக்கு ஜோடியாக சிறப்புத்தோற்றத்தில் நடிக்கிறார் ‘நேரம்’ புகழ் நிவின் பாலி.
“இயல்பிலேயே தைரியமான பெண் ஒருத்தியை மையப்படுத்திய கதை தான் இது. டைட்டில் ரோலான ‘மிலி’ என்கிற கதாபாத்திரத்தில்தான் அமலாபால் நடிக்கிறார்.. என்னுடைய முந்தைய படமான ‘ட்ராஃபிக்’ போல இந்தப்படத்திலும் சமூகத்திற்கு சொல்லகூடிய செய்தி ஒன்றும் படத்தில் உண்டு” என்கிறார் ராஜேஸ் பிள்ளை..
Comments
Post a Comment