19th of April 2014
சென்னை::இன்றைய தேதியில் இந்தியாவிலேயே பிசியான நடிகை யார் என்று கேட்டால் அது ஹன்சிகா மோத்வானிதான். அதுவும் காதல் பிரேக்-அப் ஆனபிறகு சகட்டுமேனிக்கு படங்களை ஒத்துக் கொண்டு நடிக்க ஆரம்பித்திருக்கிறார். தமிழில் வாலு, அரண்மனை, மீகாமன், வேட்டை மன்னன், ரோமியோ ஜூலியட் படங்களில் நடிக்கிறார். தெலுங்கில் பவர், உயிரே உயிரே என ஒரே நேரத்தில் 7 படங்களில் நடிக்கிறார். "எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் கொடுத்து ஹன்சியை புக் பண்ணுங்க" என்று தயாரிப்பாளர்கள் கரீன் சிக்னல் கொடுக்கிறார்கள்.

இந்த
நேரத்தில்தான் ஹன்சிகாவுக்கு சின்ன சிக்கல். ஹன்சிகா மோஸ்ட் வாண்டட்
ஹீரோயினாக இருப்பதால் அவரது கால்ஷீட்டை நான் வாங்கித் தருகிறேன் என்று பல
போலி கால்ஷீட் மேனேஜர்கள் கிளம்பி விட்டார்கள். ஒரு நாள் ஹன்சிகாவின்
அம்மாவுக்கு கோயம்புத்தூரில் இருந்து ஒரு புது புரட்யூசர் போன் பண்ணி
"பொள்ளாச்சியில ஓப்பனிங் சாங்குலேருந்து ஷூட்டிங் ஆரம்பிச்சிருவோம், குல
தெய்வம் கோவில்ல பூஜை போட்டுருவோம். அரண்மனை மாதிரி வீடு வச்சிருக்கேன்.
நீங்களும் பாப்பாவும் அங்க தங்கிக்கலாம்"னு போன் பண்ண... அலறி
அடித்திருக்கிறார் அம்மா.
யாரோ ஒரு போலி மேனேஜர்
கோயம்புத்தூர் புது புரட்யூசர் ஒருத்தர்கிட்ட அவர் மகனுக்கு ஜோடியாக
நடிக்க ஹன்சிகாவை புக் பண்ணித் தர்றேன்னு சொல்லி சில லட்சங்களை ஆட்டைய
போட்டிருக்கிறார். புரட்யூசர் லோக்கல்ல செல்வாக்கான ஆளுங்றதால சில
லட்சத்தோட போகட்டும்னு விஷயத்தை அப்படியே அமுக்கிட்டார். அதன் மூலம்
எச்சரிக்கை அடைந்த ஹன்சிகா போலி மேனேஜர்களிடம் ஏமாறாதீர்கள் என்று தன்
டுவிட்டரில் எச்சரித்திருக்கிறார்.
அவர்
டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: "தெலுங்கிலும், தமிழிலும் நான் பிசியாக
நடித்து வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததுதான். இந்த நிலையில் என் சார்பாக
பலர் தயாரிப்பு நிறுவனங்களிடம் பேசி வருவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.
இவர்கள் எனது கால்ஷீட் மேனேஜர்கள் என்று தயாரிப்பாளர்களிடம்
கூறிவருவதாகவும் அறிகிறேன். இப்படிப்பட்ட நபர்களை யாரும் நம்ப வேண்டாம்.
எனக்கு எந்த கால்ஷீட் மேனேஜரும் இல்லை. நான் யாரையும் நியமிக்கவில்லை. என்
அம்மாதான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறார். என் கால்ஷீட் தொடர்பாக
யாராக இருந்தாலும் என் அம்மாவைத்தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்று
கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு ஹன்சிகா எழுதியிருக்கிறார்.
Comments
Post a Comment