23rd of April 2014
சென்னை::தமிழ், தெலுங்கு சினிமாவை கடந்த மூன்று ஆண்டு காலமாக கட்டி ஆண்டுவரும் அனுஷ்காவிற்கு இருந்த மிகப்பெரிய மனக்குறை இன்னும் அஜித்துடன் சேர்ந்து நடிக்க முடியவில்லையே என்பதுதான். அது இப்போது கௌதம் மேனன் மூலமாக அஜித்தின் 55வது படத்தில் நடிப்பதன் தீர்ந்துவிட்டது.
தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றுவரும் முதல்கட்ட படப்பிடிப்பில் அஜித்துடன் சேர்ந்து அனுஷ்கா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.. அதனால் தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் இருக்கிறார் அனுஷ்கா.
போலீஸ் அதிகாரியை பற்றிய கதை என்றாலும் அதிலும் ரொமான்ஸ், ஆக்ஷன், காமெடி என கலந்துகட்டி அடிக்க இருக்கிறார் கௌதம் மேனன். தற்போது நடந்துவரும் முதற்கட்ட படப்பிடிப்பு வரும் மேமாதம் 15 வரை தொடர்ந்து நடைபெறும் என தெரிகிறது..
Comments
Post a Comment