19th of April 2014
சென்னை::அடுத்தடுத்த தோல்விகளுக்குப் பிறகு சிங்கம் 2 ஹிட் படமாக அமைந்திருப்பதால் அந்த வெற்றியை தக்க வைக்க போராடி வருகிறார் சூர்யா. அதற்காகத்தான் லிங்குசாமியைத் தேடிப்போனார். கார்த்தியை வைத்து வெங்கட்பிரபு டைரக்ட் செய்த ‘பிரியாணி’ பெரிய அளவில் ஹிட்டாகா விட்டாலும் முதலுக்கு மோசமில்லை வசூலை அந்தப்படம் தந்து விட்டது. ஆகவே அஞ்சானுக்குப் பிறகு கொஞ்சம் கூட தாமதிக்காமல் வெங்கட்பிரபுவுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் சூர்யா.

கடந்த 14 ஆம் தேதி சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படத்தில் சூர்யாவின் ஜோடி இன்னும் முடிவாகவில்லை. அனேகமாக இதில் ஸ்ருதிஹாசன் நடிக்கலாம். அதேபோல வெங்கட்பிரபுவின் ஆஸ்த்தான கேமராமேன் சக்தி சரவணனும் இந்தப் படத்தில் இல்லை. அவர் தெலுங்கு படம் ஒன்றிலும், பிரசாந்த்தின் சாகசம் படத்திலும் பிஸியாக இருப்பதால் அவருக்குப் பதில் ஆர்.டி.ராஜசேகரை கமிட் செய்திருக்கிறார்.
லிங்குசாமி படம் ஆக்ஷன் மசாலாவாக இருக்கும் என்பதால் இந்தப்படம் அந்தளவுக்கு இல்லாவிட்டாலும் ஒரு கஜினி ரேஞ்சுக்காவது அதே ஸ்பீட்டோட இருக்கணும் என்று மட்டும் கண்டிஷன் போட்டிருக்கிறார் சூர்யா.
அதுக்கு நீங்க பேசாம முருகதாஸையே டைரக்டராக்கியிருக்கலாமே சூர்யா ஜி..?..
Comments
Post a Comment