ஜெயம்ரவிக்கு நீங்க செட்டாக மாட்டீங்க… : டைரக்டர் முடிவால் ‘அப்செட்டான’ நயன்தாரா!!!

15th of April 2014
சென்னை::நிமிர்ந்து நில்’ வெற்றியைத் தொடர்ந்து ஜெயம்ரவி ‘ரோமியோ ஜூலியட்’ என்ற புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்ஷிகா நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர் லஷ்மண் படத்தை டைரக்ட் செய்கிறார். முதலில் இதில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது. ஆனால் ஜெயம்ரவிக்கு நயன்தாரா செட்டாக மாட்டார் என்பதால் ஹன்ஷிகாவை கமிட் செய்ததாக தெரிவித்திருக்கிறார் லஷ்மண்.
 
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது : ஜெயம் ரவியிடம் நான் ‘ரோமியோ ஜூலியட்’ கதையைக் கூறினேன். அவர் ‘தனி ஒருவன்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்த கதையை நயன்தாராவிடம் சொல்லியிருக்கிறார். ரவி சொன்ன கதை நயன்தாராவுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இந்த படத்தில் நானே நடிக்கிறேன்.என் சம்பளத்தை கூட குறைத்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ‘தனி ஒருவன்’ படத்தில் ஏற்கனவே இரண்டு பேரும் ஜோடியாக நடிக்கிறார்கள். அடுத்த படமே ரவியும், நயன்தாராவும் மீண்டும் ஜோடி சேர்வது நன்றாக இருக்காது என்று எனக்கு தோன்றியது. இந்த விஷயத்தை நயன்தாராவிடம் சொன்னேன். முதலில் அப்செட்டான் அவர் பிறகுஎனது கருத்தை புரிந்து கொண்டார் என்றார்.

என்றவர் அதன்பிறகு தான் ஹன்ஷிகாவை தேடிப்போனாராம்.
கொழுக்… மொழுக்…குன்னு இருந்தா எப்படியெல்லாம் சான்ஸ் தேடி வருது பாருங்க…...
 

Comments