15th of April 2014
சென்னை::ஊர் சுற்றி பொழுதை கழிக்கிறார் அசின்.இளம் ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்று அசின் அளித்த பேட்டி, பாலிவுட்டில் அவரது மார்க்கெட்டை படுபாதாளத்துக்கு தள்ளிவிட்டது. இளம் நடிகர்களான ரன்பீர் கபூர், சாஹித் கபூர் போன்றவர்கள் அசினை கண்டுகொள்ளாமல் விட்டனர். சோனாக்ஷி சின்ஹா, சோனம் கபூர், அனுஷ்கா ஷர்மா போன்றவர்களை சுற்றியே பட வாய்ப்புகள் சுழல்கிறது.இதையடுத்து கேரளாவில் உள்ள பண்ணை தோட்டம் மற்றும் தனக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு சென்று பொழுதை கழிக்கிறார் அசின். சமீபத்தில் இந்தோனேசியாவில் பாலி தீவுக்கு சென்ற அவர் அங்குள்ள கடற்கரை பகுதி காட்டேஜில் அறை எடுத்து தங்கினார்.
வேகமாக செல்லும் படகில் பாதுகாப்பு உடை அணிந்தபடி பாய்ந்து செல்லும் ஜெட் ஸ்கிங், ஸ்கேட்டிங் செய்வதுபோன்ற சறுக்கு பலகையில் நின்றபடி படகின் வேகத்துக்கு ஏற்ப தண்ணீரில் நின்றபடி செல்வது, தலையில் ஹெல்மெட் அணிந்தபடி ஆக்ஸிஜன் சிலிண்டருடன் கடலுக்கு அடியில் சென்று மீன்களுடன் விளையாடுவது போன்ற சாகச விளையாட்டுகளில் பங்கேற்றார். இதுபற்றி அசின் கூறும்போது,‘நான் ஒரு நீர்பறவை. கடற்கரையில் இதுபோல் சாகச விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்கும் என்றார். தற்போது ‘ஆல் ஈஸ் வெல் என்ற ஒரே ஒரு இந்தி படத்தில் மட்டும் நடித்து வருகிறார் அசின்...

Comments
Post a Comment