18th of April 2014
சென்னை::2013-ஆம் ஆண்டு இறுதியில் மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றிபெற்றிருக்கும் நடிகர் மோகன்லாலின் திரைப்படம் 'த்ரிஷ்யம்'. இது ஒரு டிராமா திரில்லர் வகைப் படமாகும். இந்தப் படத்தை ஜீத்து ஜோசப் எழுதி இயக்கினார். மோகன்லால் ஜோடியாக நடிகை மீனா நடித்திருந்தார். இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலிலும் சாதனை படைத்தது.

ரூ.4.6 கோடியில் மட்டும் தயாரான இந்த படம் இதுவரை 51 கோடி ரூபாய் வசூல்
செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் த்ரிஷ்யம் படம் மேலும் சாதனை
படைத்துள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் 100 நாள்கள் ஓடிய ஒரே படம் என்ற
பெருமையை டைட்டானிக் திரைப்படம் தான் இதுவரை பெற்றிருந்தது. ஆனால் இப்போது
அந்த சாதனையை தென்னிந்திய படமான த்ரிஷ்யம் முறியடித்து உள்ளது.
அதுமாதிரி ஐக்கிய அரபு நாடுகளில் வெளியாகி 100 நாட்கள் தொடர்ந்து ஓடிய
முதல் மலையாள படமும் ’த்ரிஷ்யம்’ தான்! கடந்த ஜனவரி மாதம் 2 –ஆம் தேதி
எல்டோரடோவில் வெளியான ’த்ரிஷ்யம்’ 100-வது நாளை கடந்து இன்னமும் அங்கு
வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறதாம். இதன் தமிழ் ரீமேக்கில்தான் உலக நாயகன்
கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment