- Get link
- X
- Other Apps
சென்னை::வீரம் வெற்றியை அடுத்து அஜீத் நடிக்கும் படத்தை
இயக்குகிறார் கௌதம் மேனன். இந்த படத்தை ஆரம்பம் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்
தயாரிக்கிறார். இதில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா,எமி ஜாக்சன்
நடிக்கின்றனர்.இப்படத்தின் கதைப்படி அஜீத்துக்கு இரண்டு வேடங்களாம்.அதில் வில்லன்
பாத்திரமும் ஒன்று.கதைப்படி அந்த வில்லன் பாத்திரம் மிகுந்த முக்கியத்துவம்
வாய்ந்ததாம்.
ஆனால் வில்லன் பாத்திரத்தை தான் நடிக்கவில்லை என்று அஜீத்
கூறிவிட்டாராம்.இதனால் அந்த வில்லன் பாத்திரத்துக்கு அரவிந்த்சாமியை
ஒப்பந்தம் செய்துவிட்டாராம் கௌதம்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரவிந்த்சாமியை சந்தித்த கவுதம்மேனன்
அடுத்து நான் ஒரு பெரிய ஹீரோவுடன் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், அதில்
நீங்கள்தான் வில்லனாக நடிக்க வேண்டும் என்று கூறினாராம். மேலும் உடலமைப்பை
சிக்ஸ் பேக்க்கு கொண்டு வரவேண்டும் என்றும் கூறிச் சென்றாராம்.
அதனால்
கௌதமுக்காக அரவிந்த்சாமி தற்போது சிக்ஸ் பேக் உடலமைப்புக்கு மாற்றி
விட்டாராம்.கௌதம் தற்போது கதையில் இரண்டு வில்லன்கள். ஒன்றை அஜீத் செய்ய மற்றொரு
வில்லனை அரவிந்த் சாமியை நடிக்கவைக்கத்தான் கவுதம் முதலில்
திட்டமிட்டிருந்தார். இப்போது அஜீத் வில்லன் வேடத்தை ஏற்க மறுத்ததை
அடுத்து, அந்த வில்லன் கேரக்டரை அரவிந்த் சாமிக்கு கொடுத்துவிட்டாராம்.
மேலும் அரவிந்த்சாமி நடிப்பதாக இருந்த வில்லன் கேரக்டருக்கு தேர்வு
நடத்திவருகிறார் கவுதம் மேனன்.....
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment