சந்தானம் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் கதையின் விலை ஒன்னேகால் கோடி!
18th of April 2014
சென்னை::சந்தானம் கதாநாயகனாக நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் படம் - வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான பிவிபி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் மரியாதை ராமண்ணா என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக். பிரபல தெலுங்குப்பட இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், சுனில் நடிப்பில் 2010 ஆம் வருடம் வெளியாகி, சுமார் 30 கோடி வசூல் செய்த படம் மரியாதை ராமண்ணா. அதுவரை காமெடி நடிகராக இருந்த சுனிலை கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்த்தியதும் இந்தப் படம்தான்.

அப்போது,
மரியாதை ராமண்ணா படத்தின் ரீமேக் ரைட்ஸை வாங்கி சிவகார்த்திகேயனை வைத்து
தமிழில் இப்படத்தை எடுக்க முயற்சி செய்தார் தயாரிப்பாளர் எஸ்கேப்
ஆர்ட்டிஸ்ட் மதன். மரியாதை ராமண்ணா படத்தின் கதைக்கு 80 லட்சம் வரை கொடுக்க
முன் வந்தார். அவரை முந்திக் கொண்டு ஒன்னேகால் கோடி கொடுத்து அப்படத்தின்
ரீமேக் ரைட்ஸை வாங்கியது பிவிபி நிறுவனம்.
சுமார்
மூன்று வருடங்கள் வரை காத்திருந்து தற்போது சந்தானத்தை வைத்து வல்லவனுக்கு
புல்லும் ஆயுதம் படத்தைத் தயாரித்திருக்கிறது. இவ்வளவு பெரிய தொகையைக்
கொடுத்து வாங்கப்பட்ட கதையில் சந்தானம் ஏகப்பட்ட மாற்றங்களை செய்ததால்,
பிரதான கதையே மாறிவிட்டதாம். இப்படி எல்லாம் மாற்றம் செய்வார் என்ற முன்னரே
தெரிந்திருந்தால் ஒன்னேகால் கோடி கொடுத்து ரைட்ஸை வாங்கி இருக்க மாட்டோம்
என்று புலம்புகிறதாம் தயாரிப்பு தரப்பு.
Comments
Post a Comment