ஆக்ஷன் ஜி… டைரக்ஷன் ஸ்ரீ..! – ‘டமால் டுமீல்’!!!

15th of April 2014சென்னை::சரோஜா’, ‘மங்காத்தா’ என நான்கு ஹீரோக்களில் ஒருவராக தனது திறமையை காட்டிய வைபவ் தனி ஹீரோவாக அடித்து தூள் பறத்தும் படம் தான் ‘டமால் டுமீல்’. ரம்யா நம்பீசன் தான் இவருக்கு ஜோடி.
 
முக்கியமான வில்லன்களாக கோட்டா சீனிவாசராவ் மற்றும் ஷாயாஜி ஷிண்டே இருவரும் நடித்திருக்கிறார்கள்.
 
படத்தை இயக்கியுள்ளார் ஸ்ரீ.. படத்தின் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் ஜி. இசை எஸ்.எஸ்.தமன். எப்படியாவது லஞ்சம் கொடுத்தாவது காரியம் சாதிக்க நினைக்கும் வைபவிற்கு ஒரு கட்டத்தில் வேலை போய்விடுகிறது.
 
இந்நிலையில் இரண்டு சமூக விரோதிகளின் பிடியில் சிக்கும் வைபவ் அவர்களிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை.

Comments