27th of April 2014
சென்னை::50
வயதாகும் ஸ்ரீதேவி கடந்த 1996ஆம் ஆண்டிற்கு பின்னர் நேரடி தமிழ்ப்படத்தில்
நடிக்கவில்லை. 1996ஆம் ஆண்டு அரவிந்தசாமியுடன் அவர் நடித்த தேவராகம் படம்
வெளியானது. இளையராஜாவின் இசையில் அமைந்த அந்த படத்தை கேயார்
இயக்கியிருந்தார். ஸ்ரீதேவி 1986ஆம் ஆண்டு ரஜினியுடன் நடித்த நான் அடிமை
இல்லை படத்திற்கு பின்னர் அவர் பாலிவுட்டுக்கு சென்றுவிட்டார். அதன்பின்னர்
அவர் தமிழ்ப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது. நான் அடிமை இல்லை படத்திற்கு பின்னர் மீனாட்சி
திருவிளையாடல், தேவராகம் ஆகிய இரண்டே படங்கள்தான் தமிழில் அவர்
நடித்துள்ளார்.
தற்போது தமிழில் ஒரு படத்தில் நடிக்க நடிகை ஸ்ரீதேவி ஒப்பந்தமாகி உள்ளார்.
நான் ஈ திரைப்படத்தில் நடித்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர்
நடிகர் சுதீப் சுதீப்பின் நடிப்பை ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டினார் அவர்
தற்போது கிளவுட் நைன் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம்
ஆகியுள்ளார். இதில் ஒரு பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தில் மிக
முக்கிய வேடத்தில் பாலிவுட்டின் ஸ்ரீதேவி நடிக்கிறார் என்பது தான்.
இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படத்திற்கு பின்னர் வந்த பல வாய்ப்புகளை
தட்டிக்கழித்த ஸ்ரீதேவி, தற்போது தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்க
முன்வந்துள்ளார். இந்த படத்தை கிளவுட் நைன் நிறுவனம் தயாரிக்கின்றது.
இன்னும் இந்த படத்தின் ஹீரோ முடிவு செய்யாத நிலையில் ஸ்ரீதேவியும்,
சுதீப்பும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுதீப் ஸ்ரீதேவிக்கு ஜோடியா அல்லது படத்தின் வில்லனா? என்பது குறித்து
தயாரிப்பு நிறுவனம் எவ்வித விளக்கமும் கொடுக்கவில்லை. ஆனால் இருவரும்
சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை...

Comments
Post a Comment