பணம் இல்லாவிட்டாலும் படம் எடுப்பேன்: ஏ.ஆர்.முருகதாஸ்!!!

8th of April 2014
சென்னை::சமீபத்தில் வெளியான மான் கராத்தே படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் மட்டும் 10 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியது. படம் பார்த்தவர்களின் கருத்து அடிப்படையில் பிப்டி பிப்டி பிரசண்ட். அதாவது பாதிபேருக்கு பிடித்திருக்கிறது. மீதி பேருக்கு அதில் மாற்றுக் கருத்து உண்டு. ஆனாலும் இரண்டு வாரங்களுக்கு படத்தை இழுத்து பிடித்து ஓட்டினால்தான் வாங்கியவர்களுக்கு லாபம் கிடைக்கும் என்பதால் அவசர அவசரமாக மீடியாக்களை அழைத்து சக்சஸ் மீட் நடத்தி விட்டார்கள்
இந்த மீட்டில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது: மான் கராத்தேவை நான் ஆரம்பித்தற்கு காரணமே என் உதவியாளருக்கு ஒரு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகத்தான். மான் கராத்தேவுக்கு சிவகார்த்திகேயனை புக் செய்தபோது அவர் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தார். இப்போது பெரிய நடிகராக வளர்ந்துவிட்டார். அதனால் மான்கராத்தேவின் பட்ஜெட்டும், வியாபாரம் பெரிதாகி விட்டது.
படத்தில் உள்ள நல்ல விஷயங்களை மக்களிடம் சொல்லுங்கள். குறைகளை எங்கள் காதில் சொல்லுங்கள். சிலர் இதை காமெடி படம்தானே என்று குறைத்து மதிப்பிடுகிறார்கள். உண்மையில் ஆக்ஷன் படத்தை காட்டிலும் காமெடி படம் எடுப்பதுதான் கஷ்டம். ஆக்ஷன் படத்தில் ஏதாவது தவறு நடந்து விட்டால் சவுண்ட் எபெக்டை அதிகரித்து சமாளித்து விடலாம். ஆனால் காமெடி படங்கள் மக்களை சிரிக்க வைக்காவிட்டால் அப்புறம் படத்தோட எதிர்காலமும் காமெடியாகிவிடும்.
நான் டைரக்ட் செய்யும் படங்கள் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கிறேன். அதனால் இன்னும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசையில் நான் படம் தயாரிக்கவில்லை. என் உதவியாளர்கள், திறமையான புதுமுகங்களை அறிமுகப்படுத்துவதற்காகத்தான் படம் தயாரிக்கிறேன். பணம் எனக்கு இரண்டாது மூன்றாவது விஷயம்தான். பணமே இல்லாவிட்டாலும் திறமையான புதுமுகங்களை வைத்து படம் எடுத்துக் கொண்டே இருப்பேன்.
இவ்வாறு ஏ.ஆர்.முருகதாஸ் பேசினார்.....
 

Comments