பேட்மின்டன் வீரர் மத்யாஸுடன் திருமணமா என்றதற்கு பதில் அளித்த டாப்ஸி!!!

21st of April 2014
சென்னை::பேட்மின்டன் வீரர் மத்யாஸுடன் திருமணமா என்றதற்கு பதில் அளித்தார் டாப்ஸி.‘ஆடுகளம், ‘வந்தான் வென்றான் உள்ளிட்ட பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் டாப்ஸி. இவர், பேட்மின்டன் வீரர் மத்யாஸை  விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து டாப்ஸி கூறியதாவது:

மத்யாஸை எனக்கு நன்றாக தெரியும். இதற்குமேல் இதுபற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. நடிப்பைப் பற்றி என்னிடம் கேளுங்கள் சொல்கிறேன். பர்சனல் வாழ்க்கை பற்றி கேட்காதீர்கள். என் திருமணம் பற்றி நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதைவிட நிறைய விஷயங்கள் சினிமாவில் சாதிக்க வேண்டி உள்ளது. ‘சஷ்மே பத்தூர் இந்தி படத்தையடுத்து ரன்னிங் ஷாதி டாட் காம்‘ படத்தில் நடிக்கிறேன்.

இதையடுத்து நீரஜ் பாண்டே இயக்கும் படத்தில் நடிக்கிறேன். சினிமாவில் எனக்கு பின்புலமாக நடிகரோ, பெரிய நிறுவனமோ கிடையாது. ஒரு சின்ன தவறுகூட என்னை படத்திலிருந்து வெளியேறச் செய்துவிடும். 3 வருடம் தமிழ், தெலுங்கில் நடித்துள்ளேன். அதேபோன்ற வேடங்களை இந்தியிலும் செய்ய விரும்பவில்லை.இவ்வாறு டாப்ஸி கூறினார்.
’’

Comments