28th of April 2014
சென்னை::நஸ்ரியாவுடன் நடித்தபோது சூப்பராக கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது என்றார் மம்மூட்டி மகன்.‘நய்யாண்டி படத்தில் நடித்தபோது தனுஷுடன் முத்தக்காட்சியில் நடிக்கவும், நெருக்கமான காட்சியில் நடிக்கவும் முரண்டு பிடித்தார் நஸ்ரியா.
இதையடுத்து அப்பட இயக்குனர் சற்குணத்துடன் மோதல் ஏற்பட்டது. ஒரு வழியாக பிரச்னை தீர்ந்த நிலையில் நஸ்ரியாவுக்கு திருமணம் முடிக்க குடும்பத்தினர் அதிரடி முடிவு எடுத்தனர். இதையடுத்து மல்லுவுட் நடிகர் பஹத் பாசிலுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்கிடையில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக்கொடுப்பதில் பிஸியாக இருக்கிறார் நஸ்ரியா.
இந்நிலையில் நஸ்ரியாவுடன் நடிப்பில் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆனது என்று மம்மூட்டி மகன் துல்கர் சல்மான் கூறி உள்ளார்.இதுபற்றி துல்கர் கூறும்போது. ‘தமிழில் முதன்முறையாக நான் நடித்துள்ள படம் ‘வாயை மூடி பேசவும். நஸ்ரியா ஹீரோயின். நஸ்ரியாவுக்கும் எனது மனைவிக்கும் நல்ல நட்பு உண்டு. ஆனால் அதற்கு முன்பே நஸ்ரியாவுடனும் அவரது குடும்பத்தினருடனும் எனக்கு நட்பு உள்ளது. நீண்ட கால இந்த நட்புதான் இப்படத்தில் எங்களுக்குள் நல்ல கெமிஸ்ட்ரியாக வெளிப்பட்டிருக்கிறது என்றார்.
Comments
Post a Comment