மணிரத்னம் படத்தில் மகேஷ்பாபு இருக்காருங்கோ!!!

4th of April 2014
சென்னை::நல்லவேளை அந்த செய்தி வதந்தியாகவே போய்விட்டது.. உண்மை நிலைத்துவிட்டது. மணிரத்னம் படத்திலிருந்து மகேஷ்பாபு விலகிவிட்டார் என்ற செய்தி கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானதே.. அதைத்தான் சொல்கிறோம். அப்படியெல்லாம் எதுவும் இல்லை மகேஷ்பாபு படத்தில் நடிக்கிறார் என்கிற தகவலை சுஹாசினி உறுதிப்படுத்தியுள்ளார்.
 
மல்டி ஸ்டார் கதையான இந்தப்படத்தில் மகேஷ்பாபுவுடன் நாகார்ஜூனா, ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு ஸ்ருதிஹாசனுக்கு கிடைத்திருக்கிறது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் தயாராகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்க இருக்கிறது.....

Comments