காமெடியனாக நடிப்பதில்லை, கதாநாயகனாக மட்டுமே: சந்தானம் எடுத்த அதிரடி முடிவு!!!

15th of April 2014
சென்னை::சிரிப்பு நடிகர்கள் கதாநாயகனாக நடிப்பது ஒன்றும் புதிதில்லைதான். கலைவாணர் தொடங்கி கருணாஸ் வரை எல்லா காலக்கட்டங்களிலும் சிரிப்பு நடிகர்கள் கதாநாயகனாக நடித்திருக்கின்றனர். இந்தப் பட்டியலில் சந்தானமும் சேர்ந்துவிட்டார். விஜய் டிவியின் லொள்ளுசபா நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் சிரிக்க வைத்தவர்,
 
மன்மதன் படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்த சந்தானம் சில வருடங்களில் வடிவேலு, உள்ளிட்டவர்களை ஓரங்கட்டிவிட்டு நம்பர் ஒன் சிரிப்பு நடிகரானார். கதாநாயகனைவிட அதிக சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்த சந்தானம், அடுத்த முயற்சியாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் கதாநாயகனாகிவிட்டார். இப்படம் விரைவில் வெளிவரவிருக்கும்நிலையில் தன் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார் சந்தானம். அதாவது இனி காமெடியனாக நடிப்பதில்லை, கதாநாயகனாக மட்டுமே நடிப்பது - என்பதே சந்தானம் எடுத்த அதிரடி முடிவாகும்… 

Comments