22nd of April 2014
சென்னை::ரஜினி நடித்த படங்களில் அதிக வசூல் சாதனை புரிந்த படங்களில் பாட்ஷா
குறிப்பிடத்தக்கது. வசூலில் மட்டுமல்லாது அவரது கேரியரிலும் முக்கியமான
படமும் கூட. சுரேஷ்கிருஷ்ணா இயக்கிய அந்த படத்தைதான் தான் நடித்ததில்
பிடித்த பட வரிசையில் முதலிடம் கொடுத்து வருகிறார் ரஜினி. மேலும்,
அதையடுத்து ஆக்சன் கதைக்களம் என்று யோசிக்கும் அத்தனை டைரக்டர்களுக்குமே
ரஜினியின் பாட்ஷாதான் முன்னுதாரணமாக கருத்தில் கொண்டு ஸ்கிரிப்ட் பண்ணி
வருகிறார்கள்.
அந்த வகையில், சூர்யாவைக்கொணடு அஞ்சான்
படத்தை இயக்கி வரும் லிங்குசாமியும் பாட்ஷா படத்தை தழுவிதான் அஞ்சான்
படத்தை இயக்கி வருவதாக கூறப்படுகிறது. அதன்காரணமாகவே பாட்ஷாவைப்போன்று
மும்பையில் கதைக்களத்தை வைத்திருக்கிறாராம். அப்படத்தில் நண்பனுக்காக ரஜினி
பழி வாங்குவது போன்று இப்படத்திலும் தனது நண்பனுக்காக சூர்யா பழி
வாங்குவதுதான் கதையாம்.
அதோடு, பாட்ஷாவில்
மறைந்த ரகுவரன் வில்லனாக நடித்த வேடத்தில் இப்போது இந்தி நடிகர் மனோஜ்
பஜ்பாய் நடிக்க, சூர்யாவின் உயிர் நண்பராக வித்யு ஜம்வால் நடிக்கிறார்.
இவர்தான் ப்பாக்கியில் விஜய்யுடன மோதிய வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது..
’’
Comments
Post a Comment