மம்முட்டி படத்துக்கு சென்சார் போர்டு நோட்டீஸ்!!!

19th of April 2014
சென்னை::கடந்த வாரம் மம்முட்டி நடித்த ‘கேங்ஸ்டர் ‘ படம் வெளியானது. ’22 ஃபீமேல் கோட்டயம்’ பட்த்தை இயக்கிய ஆஷிக் அபு தான் இந்தப்படத்தையும் இயக்கியுள்ளார். படம் ஆஹா, ஓஹோ, சூப்பர்ஹிட், சுமார் என கலவையான விமர்சனங்களுடன் நன்றாகவே ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்தப்பட்த்திற்கு சென்சார் போர்டு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருந்தது. காரணம் வன்முறை காட்சிகள் கொஞ்சம் அதிகமாகவே இடம் பெற்றிருந்ததுதான். ஆனால் இந்தப்படத்திற்கான போஸ்டர்கள் எதிலும் ‘ஏ’ என்கிற குறியீடு எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
 
இதுகுறித்து சென்சார் போர்டுக்கு ஒரு சிலர் புகார் மனு தட்டிவிட, இப்போது பட்த்தின் தயாரிப்பாளருக்கு இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சென்சார் போர்டு. சினிமாட்டோகிராப் விதி 38ன் கீழ் சென்சார் சான்றிதழ் பற்றிய குறியீடு இல்லாமல் போஸ்டர் ஒட்டுவது ஜாமீன் வழங்கப்படமுடியாத குற்றமாக கருதப்படுகிறது..
 

Comments