முத்தக்காட்சிக்கு பயந்து கேரளாவுக்கு ஓட்டம் பிடித்த லட்சுமி மேனன்!!!

 8th of April 2014
சென்னை::மலையாளத்தில் ஓரிரு படங்களில் நடித்து கும்கி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். அந்த படம் வெற்றியை தொடர்ந்து தமிழில் பிஸியானதால் அவரது தாய்மொழியான மலையாளத்தை நினைத்துகூட பார்க்கவில்லை. இந்தநிலையில் விஷாலுடன் நடித்து வெளிவர உள்ள நான் சிகப்பு மனிதனில் படத்தில் உதட்டு முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.அதுமட்டுமின்றி செய்தியாளர்கள் சந்திப்பின்போது தான் யாருடனும் முத்தக்காட்சியில் நடிக்க தயார் என்று கூறினார்.
ஆனால் தற்போது அப்படி கூறியது தவறு என நினைத்தாராம். இனி தமிழில் படத்துக்குப்படம் உதட்டு முத்தக்காடசி வைத்து தனது உதட்டை புண்ணாக்கி விடுவார்கள் என்கிற பயம் அவருக்கு வந்துவிட்டதாம். அதனால் இந்த பரபரப்பு அடங்கும் வரை மலையாள பக்கம் கவனத்தை திருப்பியிருக்கிறாராம். இவர் தற்போது மலையாளத்தில் ஜோஷி இயக்கத்தில் திலீப் நடிக்கும் அவதாரம் என்ற படத்தில் நடிக்கிறாராம். முத்த சர்ச்சை தீரும்வரை இனி மலையாள படங்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம் லட்சுமி மேனன்...
 

Comments