சென்னை::1947களில் இருந்த ஒரு கவித்துவமான காதலை எதிர்பார்க்கும் ஹீரோவுக்கும், 2025-ல் தன் வாழ்கையை எப்படிப் பாதுகாப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கால்குலேட்டிவாக யோசிக்கும் ஹீரோயினுக்கும் இடையே காதல் ஏற்பட்டால்..? நினைக்கவே சுவராஸ்யமாக இருக்கிறதில்லையா..?
அப்படி இவர்களுக்கிடையே ஏற்பட்ட சுவாரஸ்யமான காதலை ஜாலியாக சொல்வதுதான் ‘ரோமியோ ஜூலியட்’ படம். ‘எங்கேயும் காதல்’ படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி, ஹன்சிகா இருவரும் இந்தப்படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.
இந்தப்படத்தை எழுதி இயக்குகிறார் லஷ்மன். இவர் பல விளம்பரப்படங்களை இயக்கியதுடன் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியவர். “பேண்டஸியான காதல் கதையில், காதலை எப்படி ஜாலியாக சொல்கிறோம் என்பது தான் திரைக்கதை” என்கிறார் லட்சுமண். படத்திற்கு இசையமைக்கிறார் டி.இமான்.
எப்படி ரோமியோ ஜூலியட் தலைப்பை பிடித்தீர்கள் என்று கேட்டால்,”ஒரு வருடத்திற்கு குறைந்த்து 100 படங்களாவது காதலை மையப்படுத்தியதாக வருகின்றன. ஆனால் இந்த ரோமியோ ஜூலியட் என்ற தலைப்பை இத்தனை நாட்கள் எப்படி விட்டு வைத்தார்கள் என்பது ஆச்சர்யமான விஷயம். ஒருவேளை இந்த தலைப்பு இந்த படத்திற்காகவே காத்திருந்ததோ” என்கிறார் இயக்குனர் லட்சுமண்.. ::
Comments
Post a Comment