அதிக சம்பளம் வாங்கும் பாலிவுட் இயக்குநரான பிரபுதேவா!!!

30th of April 2014சென்னை::நடன இயக்குநராக திரையுலகில் அறிமுகமான பிரபுதேவா, பிறகு நாயகனாக அவதாரம் எடுத்து, தற்போது இயக்குநராக வலம் வருகிறார். தெலுங்கு படத்தின் மூலம் இயக்குநரான பிரபுதேவா, தற்போது இந்தி திரையுலகில் முன்னணி இயக்குநராக உள்ளார்.

இதற்கிடையில், பிரபுதேவா அடுத்து இயக்கவுள்ள புது இந்திப் படம் ஒன்றுக்காக ரூ.30 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறாராம். இந்த சம்பளம் தான் இந்தி திரையுலகில் ஒரு இயக்குநர் வாங்கும் அதிகபடியான சம்பளம் என்று கூறப்படுகிறது.
 

Comments