டைட்டிலைக் கூட விட மாட்டாங்க போலிருக்கே… : ‘புளிப்பு இனிப்பு’ வாக மாறிய மடிசார் மாமி!!!

21st of April 2014
சென்னை::பிராமண சமுதாய மக்களை இழிவுபடுத்தும் வகையிலும், அம்மக்களின் கலாசார, பழக்க வழக்கங்களை கேலி செய்யும் விதத்திலும் இருப்பதாக ‘

மடிசார் மாமி’ என்ற படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்குமாறு பிராமணர் சங்கம் சார்பில் கடந்த ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை தயாரித்தவர்கள் படத்தின் டைட்டிலை மாற்றிவிட்டு ரிலீஸ் செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கியது.
 
இதையடுத்து “மடிசார் மாமி” படத்தின் டைட்டில் ‘புளிப்பு இனிப்பு’ என்று மாற்றப்படுவதாக அந்தப்படத்தை தயாரித்து வரும் ‘ஷில்பா மோசன் ஒர்க்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் தயாரிப்பாளர் சுஷாந்த் கத்ரு தெரிவித்திருப்பதாவது :
 
நீதிமன்றத்தின் உத்தரவுப்படியும், எந்த ஒரு மனிதனின் மனதையும் பாதிப்பது நல்ல சினிமாவாகாது என்கிற உயரிய நோக்கத்தோடும் ‘மடிசார் மாமி’ படத்தின் டைட்டிலை ‘புளிப்பு இனிப்பு’ என்று மாற்றி வைத்துள்ளோம். வருகிற மே மாதம் ரிலீசாக உள்ள இப்படம் ஒரு ஃபேமிலி காமெடிப் படமாகும்.
 
இரண்டு மணி நேரம் காமெடி கலாட்டா தான் இந்த ‘புளிப்பு இனிப்பு’ என்ற அவர் ‘மடிசார் மாமி’ என்று படத்துக்கு டைட்டில் வைத்ததற்காக வருத்தத்தையும் இங்கே பதிவு செய்து கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
 

Comments