இப்படித்தான் பிஸியானாராம்… : ஹீரோவாக்க வரும் டைரக்டர்களை ஏமாற்றி இசையமைக்கும் அனிருத்!!!

29th of April 2014
சென்னை::இசையமைப்பதில் முன்னணி இடத்தில் இருக்கும் இளம் இசையமைப்பாளரான அனிருத்தை சமீபகாலமாக ஹீரோவாக நடிக்கக் கேட்டு நெறைய டைரக்டர்கள் படையெடுக்கிறார்கள். ஆனால் அவருக்கோ நடிப்பில் துளியும் ஆர்வம் இல்லை.
 
மாஸ் ஹீரோக்களின் கால்ஷீட் கிடைக்காத தயாரிப்பாளர்கள் புதுமுகங்களை வைத்தும் படம் எடுக்கவும் யோசிக்கிறார்கள். அவர்களுக்குப் பதிலாக ஏற்கனவே சினிமாவில் மற்ற துறைகளில் இருக்கும் பிரபலங்களை வைத்து படமெடுத்து பணம் சம்பாதிக்கலாம் என்பது அவர்கள் கணக்கு. அதற்காகத்தான் அனிருத்தையெல்லாம் ஹீரோவாக்க தேடிப் போகிறார்கள்.
 
ஆனால் அனிருத்தோ தன்னை ஹீரோவாக்க ஆசையோடு வரும் டைரக்டர்களிடம் கதையைக் கேட்டுவிட்டு இந்தப்படத்தில் நான் ஹீரோவாக நடிக்கவில்லை; வேண்டுமென்றால் படத்துக்கு மியூசிக் பண்றேன் என்று தேடி வருகிற படங்கலில் இசையமைக்கும் வேலையை அப்படியே அமுக்கி விடுகிறார்.
 
இதனால் அவருக்குப் பதில் ஏற்கனவே ஒரு மியூசிக் டைரக்டரை மனதில் வைத்திருக்கும் டைரக்டர்கள் வேறு வழியில்லாமல் தங்கள் படங்களில் அனிருத்தையே இசையமைப்பாளராக கமிட் செய்து கொள்கிறார்கள்.
 
இப்படித்தான் ‘ஆக்கோ’ படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை வாங்கினாராம் அனிருத். அந்தப்படம் மட்டுமில்லை, சமீபகாலமாக அனிருத் இசையமைக்கும் பெரும்பாலான படங்களையும் கூட இதே பாணியில் மடக்கிப் போட்டாராம்..
 

Comments