தியானம் செய்ய ரிஷிகேஷ் போன சஞ்சிதா!!!

12th of April 2014
சென்னை::பொதுவாக சூப்பர்ஸ்டார் ரஜினிதான் அமைதிக்காக அப்படியே ரிஷிகேஷ், இமயமலை என ஒரு ஆன்மீகப்பயணம் போயிட்டு வருவார்.. அதன்பின் சிம்பு காசிக்கு போய்வந்தார். இப்போது சமீபத்தில் நயன்தாராகூட மன அமைதிக்காக ரிஷிகேஷ் போய்விட்டு வந்தார்.

அதேபாணியை பின்பற்றி ‘சூதுகவ்வும்’, ‘பீட்சா-2 வில்லா’ படங்களில் நடித்த சஞ்சிதா ஷெட்டியும் சமீபத்தில் ரிஷிகேஷுக்கு போய்விட்டு வந்துள்ளார்.

எதற்காக இந்த பயணமாம்? “உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் சில பயிற்சிகளுக்காக அங்கே சென்றோம்.. மேலும் யோகா மற்றும் தியானம் ஆகிய பயிற்சிகளையும் செய்தோம்.. அது ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது” என்கிறார் சஞ்சிதா...
 

Comments