18th of April 2014சென்னை::கெளதம்மேனன் இயக்கிய மின்னலே படத்தில் அறிமுகமானவர்தான் ஹாரிஸ்
ஜெயராஜ். ஏ.ஆர்.ரகுமானிடத்தில் கீப்போர்டு பிளேயராக இருந்த அவர், தனக்கென
ஒரு புதிய பாணியில் அப்படத்துக்கு இசையமைத்து சூப்பர் ஹிட் பாடல்களாக
கொடுத்தார். அதனால் அதையடுத்து கெளதம்மேனன்-ஹாரிஸ் ஜெயராஜின் கூட்டணி
காக்கா காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளிமுத்துச்சரம், வாரணம்
ஆயிரம் படங்களிலும் தொடர்ந்தது. பின்னர் அவர்களுக்கிடையே ஏற்பட்ட
மனக்கசப்பு காரணமாக சில படங்களுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானை நாடினார்
கெளதம்மேனன்.
ஆனால், இபபோது தான் இயக்கும அஜீத்
படம் மூலம் மீண்டும் ஹாரிஸ்ஜெயராஜூடன் இணைந்திருக்கிறார் கெளதம்மேனன்.
ஏற்கனவே தாங்கள இணைந்த படங்களில் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டானதால், இந்த
படத்திலும் அது தொடர வேண்டும் என்றும் ஹாரிஸை கேட்டுக்கொண்டுள்ளார்
கெளதம்.
அதையடுத்து, தல அஜீத்தை மனதில் கொண்டு
ஏராளமான டியூன்களை ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.
அவரைப்பொறுத்தவரை அஜீத்துடன் இணையும் முதல் படம் என்பதால், அஜீத்தும்,
கெளதம்மேனனும் எதிர்பார்ப்பதை விடவும் பிரமாதமான பாடல்களை கொடுத்து விட
வேணடும் என்று தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறார்.
அதனால்,
இதற்கு முன்புவரை ஹாரிஸ் ஜெயராஜ் ரொம்ப ஸ்லோவாகத்தான் இசையமைத்துக்
கொடுப்பார் என்று அவரை குற்றம் குறை சொல்லிக்கொண்டு வேறு
இசையமைப்பாளர்களிடம் சென்று கொண்டிருநத டைரக்டர்கள், அவரது இந்த புதிய
வேகம் கண்டு ஆச்சர்யத்தில் உறைந்து நிற்கிறார்கள். அந்த அளவுக்கு ராத்திரி
பகலாக தூக்கத்தைகூட ஓரங்கட்டி வைத்துவிட்டு பாடல்களை ரெடி
பண்ணிக்கொண்டிருக்கிறாராம் ஹாரிஸ்..
Comments
Post a Comment