1st of April 2014
சென்னை::கோடைகால வெளியீடாக 'திருமணம் எனும் நிக்கா' இம்மாதம் (ஏப்ரல்) ரிலிஸாகிறது.
சென்னை::கோடைகால வெளியீடாக 'திருமணம் எனும் நிக்கா' இம்மாதம் (ஏப்ரல்) ரிலிஸாகிறது.
வித்தியாசமான கதைக்களம் கொண்ட படமாக உருவாகியுள்ள 'திருமணம் எனும் நிக்கா' படத்தில் ஜெய், நஸ்ரியா நசிம் ஆகியோர் நடித்துள்ளனர். புதுமுக இயக்குநர் அனீஸ் இயக்கியிருக்கும் இப்படம், புரிதல் அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தும் படமாக உருவாகியுள்ளது.
இப்படம் குறித்து இயக்குநர் அனீஸ் கூறுகையில், "இந்த படம் நமது நாட்டின் பிரதானமான இரு மதங்களின் சம்ப்ரதாயங்களையும், கலாசாரத்தையும் பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். நஸ்ரியாவின் நடிப்பும் சரி தோற்ற பொலிவும் சரி, அவருக்கு ஏன் இப்படி ஒரு புகழ் என்பதற்கு விடை கொடுக்கும். ஜெய் எங்கேயும் எப்போதும் எல்லோரையும் எப்போதும் கவரும் வண்ணம் நடித்து உள்ளார்.
இசை அமைப்பாளர்
ஜிப்ரானின் இசை இந்த படத்தின் வெற்றிக்கு பெரிதளவு உதவும். தயாரிப்பாளர்
ஆஸ்கர் ரவிசந்திரன் சாருக்கு என் மீது நம்பிக்கை வைத்து படம் தந்தமைக்கு
இந்த நேரத்தில் நன்றி கூற கடமை படுகிறேன். திருமணம் எனும் நிக்கா,
குடும்பத்தோடு பார்த்து மகிழும், ஒரு மெல்லிய காதல் இழை ஓடும், மெய்மறக்க
செய்யும் இசை கலந்த பீல் குட் படமாக இருக்கும்." என்று தெரிவித்தார்...
Comments
Post a Comment