21st of April 2014
சென்னை::சிம்பு-தனுஷ் இருவருமே பள்ளிக்கூட
காலத்தில் இருந்தே நண்பர்கள். ஆனால், இருவரும் ஒரே நேரத்தில் சினிமாவில்
என்ட்ரி கொடுத்ததால் நண்பர்களாக இருந்த அவர்களிடத்தில் தொழில் போட்டி
ஏற்பட்டது. விஜய்-அஜீத் இருவரும் எப்படி நண்பர்களாக இருந்தாலும்
தொழில்ரீதியாக போட்டியாளர்களாகி விட்டார்ளோ அதேபோல் சிம்பு-தனுசும் கூட
போட்டியாளர்களாகி விட்டனர்.
அதன்காரணமாக, நாளடைவில்
அவர்களுக்கிடையே பேச்சுவார்த்தைகூட குறைந்து போனது. ஆனால் சமீகாலமாக
ஆர்யா, விஷால், விஜயசேதுபதி, சிவகார்த்திகேயன் என பல புதியவர்கள்
மார்க்கெட்டில் குதித்த பிறகு, அவர்களுக்கிடையிலான போட்டி மனப்பான்மை
குறைந்து மீண்டும் நண்பர்களாக தோள் போட்டுக்கொண்டனர்.
இந்த
நிலையில, தங்களை மற்றவர்கள் போட்டி நடிகர்களாக கருதுவதை மாற்றும்
முயற்சியாக, ஏதாவது ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்று திட்டமிட்ட
அவர்கள், வெற்றிமாறன் தயாரித்து வரும் காக்கா முட்டை படத்தில் கெஸ்ட்
ரோலில் நடிக்கயிருந்தனர். ஆனால், என்ன காரணமோ இப்போது அந்த படத்தில்
தனுஷ் நடிக்கவில்லையாம். சிம்பு மட்டும்தான் நடிக்கிறாராம். அதனால் அவரது
கேரக்டரை முன்பு சொன்னதை விடவும் இப்போது இன்னும் பெருசுபண்ணி
விட்டதோடு, பப்ளிசிட்டிக்கும் அவரை பயன்படுத்தப்போகிறார்களாம்..
Comments
Post a Comment