ஆடை குறைப்பு நடிகைகள் படையெடுப்பு சன்னியை தொடர்ந்து தமிழுக்கு வர ஷெர்லின் முடிவு!!!


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
23rd of April 2014
சென்னை::ஜெய், சுவாதி நடித்திருக்கும் படம் ‘வடகறி'. இப்படத்தை சரவணன் ராஜா இயக்கி இருக்கிறார். பாலிவுட்டில் கவர்ச்சியில் கலக்கிக்கொண்டிருக்கும் ஆபாச பட நடிகை சன்னி லியோன் முதன்முறையாக இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். பாவாடை, தாவணி அணிந்து ஜெய்யுடன் அவர் குத்துப்பாடலுக்கு ஆடி இருக்கிறார். சென்னை வாலிபராக ஜெய் நடிக்க, அவரது காதலியாக சுவாதி நடிக்கிறார். சன்னி லியோனின் வரவையடுத்து மற்றொரு பாலிவுட் ஆபாச நடிகை ஷெர்லின் சோப்ராவும் தமிழில் நடிக்க ஆர்வம் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இது பற்றி ஷெர்லின் கூறும்போது, ‘இயக்குனர் ஷாஜித் ‘பேட் கேர்ள்‘ என்ற மலையாள பட  ஸ்கிரிப்ட் சொன்னார். பிடித்திருந்தது. நடிக்க ஒப்புக்கொண்டேன். ‘தமிழில் நடிப்பீர்களா?' என்கிறார்கள். தென்னிந்திய திரைப்பட துறையினர் மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு. அவர்களது திறமையை கண்டு வியந்திருக்கிறேன். மணிரத்னம், புரிஜெகன்னாத் போன்றவர்களுடனும் பணியாற்ற ஆசை' என்றார்.

 

Comments