21st of April 2014
சென்னை::வடிவேலு கடும் சோகத்தில் இருக்கிறாராம். என்ன விஷயம்?
மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு வெள்ளித்திரையில் அவர் முகம்காட்டிய படம் - தெனாலிராமன்.
நீண்ட
இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் தான் நடித்திருப்பதால், தெனாலிராமன்
வெளியாகும் தினத்தில் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதும் என்று கனவு கண்டு
கொண்டிருந்தார் வடிவேலு.
அதன் மூலம் தன் இரண்டாவது இன்னிங்ஸை கதாநாயகனாக ஆரம்பிக்கவும் திட்டமிட்டிருந்தார். இந்த எண்ணத்தின் அடிப்படையில், அடுத்து கதாநாயகனாக நடிப்பதற்கு தோதாக சிலரிடம் தனக்குப் பொருத்தமான கதைகைளையும் கேட்டு, அவற்றில் சில கதைகளை ஓகே பண்ணி வைத்திருந்தார்.
ஆனால், நடந்ததோ வேறு. தெனாலிராமன் படத்துக்கு சென்னையில் ஒரு சில தியேட்டர்களில் மட்டுமே அரங்கு நிறைந்தன.
பல தியேட்டர்களில் கூட்டமே இல்லை என்பது மட்டுமல்ல, ஓப்பனிங்கே இல்லையாம்.
சென்னை தவிர்த்து மற்ற ஊர்களில் நிலைமை இன்னும் மோசம் என்று கேள்வி.
தெனாலிராமனுக்கு ஏற்பட்ட கதியை எண்ணி கடும் வருத்தத்தில் இருக்கிறாராம் வடிவேலு.

Comments
Post a Comment