18th of April 2014
சென்னை::கொஞ்ச நாட்களாகவே காற்றுவாக்கில் புகைந்துகொண்டிருந்த செய்திதான்.. நாமும் ஏன் வீணாக அதை ஊதுவானேன் என்றுதான் விட்டுவிட்டோம். கௌதம் மேனன் டைரக்ஷனில் அஜித்தின் 55வது படத்தில் அரவிந்த் சாமியும் அருண்விஜய்யும் வில்லனாக நடிக்கிறார்கள் என்று ஒரு செய்தி பரவியதே.. அதைத்தான் சொல்கிறோம்.
ஆனால் “அந்தப்படத்தில் நான் நடிக்கவில்லை.. அதெப்படி தவறான செய்தியை நீங்கள் போடலாம்” என மீடியாக்களிடம் ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார் அரவிந்த்சாமி. அதனால் அருண்விஜய்யின் விஷயமும் இதுபோலத்தான் இருக்குமோ என்று ஒரு சின்ன டவுட் இருந்துகொண்டே இருந்தது.
ஆனால் இப்போது அதை அருண்விஜய்யே க்ளியர் செய்துவிட்டார்.. “யெஸ்.. அஜித்தின் படத்தில் நானும் நடிக்கிறேன்..
நான் அமைதியாக இருந்ததற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய கதாபாத்திரம் பற்றி விரைவில் இயக்குனர் கௌதம் மேனனே உங்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்” என ட்விட்டரில் ஹாட் நியூஸ் தட்டிவிட்டிருக்கிறார். இந்த தகவலை அஜித்தின் நெருங்கிய வட்டாரமும் உறுதி செய்திருக்கிறது.
Comments
Post a Comment