- Get link
- X
- Other Apps
24th of April 2014
சென்னை::அஜீத் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்ததுள்ளது அனைவரும் அறிவர். இல்லையென்று வருபர்களுக்கு இல்லையென்று சொல்லாத அஜித், ஒரு நல்ல மனிதர் என்பதை யாராலும் மறுக்க முடியாது அதற்கு ஓர் சிறு உதாரணம் இந்த சம்பவம்
சென்னை::அஜீத் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்ததுள்ளது அனைவரும் அறிவர். இல்லையென்று வருபர்களுக்கு இல்லையென்று சொல்லாத அஜித், ஒரு நல்ல மனிதர் என்பதை யாராலும் மறுக்க முடியாது அதற்கு ஓர் சிறு உதாரணம் இந்த சம்பவம்
தமிழ் பத்திரிகைகளில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபாற்றும் ஓவியர் ஒருவர் தனது மகன்களை நன்றாக படிக்க வைத்துவிட வேண்டும் என்று விரும்பினார். . இரண்டு மகன்களும் நன்றாக படித்து வருகிறார்கள். ஒரு சமயத்தில் இளையமகன் தன்னை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கும்படியும்,அங்கு வேலை செய்துகொண்டே படிக்கிறேன் என்று கூறியுள்ளாராம்.
வேலைபார்த்துக்கொண்டே படிப்பதாக மகன் கூறிய உறுதியை நம்பி ஒருவழியாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார் ஓவியர். ஆனால் அங்கு பகுதி நேர வேலை செய்ய கல்லுரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. வேறு வழியில்லாமல் இங்கிருந்தே படிப்பு செலவையும் அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயம் ஓவியருக்கு ஏற்பட்டது. எல்லா கடன் வாங்கி மகனுக்கு பணத்தை அனுப்பி வைத்தார் ஓவியர். மகனுக்கு இது இறுதியாண்டு ஆனால் இறுதி ஆண்டுக்கான பணத்தை தந்தையால் ஏற்பாடு செய்ய முடியவில்லை. பணம் கட்டவில்லை என்றால் கல்லூரியிலிருந்து மகனை வெளியேற்றும் நிலை உருவானதாம்.
வேறு வழியில்லாமல் தன்னிடம் அன்பு பாராட்டும் நடிகர் சிவகுமாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அகரம் பவுண்டேஷன்லேர்ந்து ஏதாவது உதவி கிடைக்குமா என்று கேட்டாராம் ஓவியர். அதற்கு சிவக்குமார், ஞானவேலை கேட்டுபாரேன் என்று கூறினாராம் இதனையடுத்து ஞானவேலுவை ஓவியர் தொடர்பு கொண்டார். அபபோது அவரோ, அகரம் பவுண்டேஷன்லேர்ந்து உதவணும்னா, அந்த பையன் அநாதையா இருக்கணும். உங்க பையனுக்கு எங்க ரூல்ஸ்படி உதவ முடியாதே என்றார்.
மிகவும் மனம் வருந்திய ஓவியர், அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது சில நபர்கள் அஜீத்தை தொடர்பு கொள்ள கூறினர். இதனையடுத்து நண்பர்களின் உதவியுடன் அஜீத்தை தொடர்பு கொண்ட ஓவியர் தன் நிலைமையை விவரித்துகூறினார். பின்னர் வீடு வந்து சேர்வதற்குள் அவருக்கு நல்ல செய்தி வந்து சேர்ந்தது. பையன் குறித்த முழு விபரங்களை கொடுத்துட்டு கவலைபடாமல் இருங்கள்.. உங்க பையனின் முழு படிப்பு செலவின் முழுதொகையும் கட்டிவிடலாம் என்று அஜீத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம்.
இல்லையென்று வருபர்களுக்கு இல்லையென்று சொல்லாத அஜித் மனம் யாருக்கு வரும்..
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment