22nd of April 2014சென்னை::நடிச்சா இனிமே ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்று சந்தானம் சபதம் செய்த நேரமோ தெரியவில்லை. இன்னொரு காமெடி நடிகரான பரோட்டா சூரிக்கும் இப்போது அந்த ஹீரோ ஆசை மெல்ல மெல்ல எட்டிப்பார்க்க ஆரம்பித்து விட்டது.
ஏற்கனவே சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்தபோது அந்தப்படம் ஹிட்டானது. அந்த தைரியத்தில் தற்போது அவர் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் படத்தில் சோலோ ஹீரோவாக நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் இனிமேல் நண்பேண்டா மாதிரியான கேரக்டர்களில் நடிக்கப் போவதும் இல்லை என்று முடிவெடுத்து சமீபத்தில் அவரைத் தேடி வந்த உதயநிதி ஸ்டாலின் படத்தைக் கூட மறுத்து விட்டார்.
இதையெல்லாம் கேள்விப்பட்ட பரோட்டா சூரிக்கு இப்போது ஹீரோ ஆசை கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்துள்ளது.
மோக்கியாவை அடுத்து பரோட்டா காமெடி நடிகருக்கு ஹீரோ அவதாரம் எடுக்கும் ஆசை வந்துள்ளது.
இதற்காக தன்னை ஹீரோவாக வைத்து படம் எடுக்க ஒரு வெயிட்டான தயாரிப்பாளரை வலைவீசித் தேடிக் கொண்டிருக்கிறாராம் சூரி. ஆனால் இன்னும் சிக்கிய பாடில்லை.
முன்னதாக காமெடியனா நடிச்சா பல வருஷத்துக்கு காலத்தை ஓட்டலாம். ஆனால் ஹீரோவானா அது கஷ்டம் என்று ஏற்கனவே ஹீரோவான காமெடியன்களின் கதைகளை சூரிக்கு சொன்னார்களாம் அவரது நலம் விரும்பிகள். ஆனால் சூரியோ விமல், சிவகார்த்திகேயன், சந்தானமெல்லாம் ஒரு காலத்தில் பிட்டு பிட்டு கேரக்டர்கள்ல நடிச்சவங்க தானே..? அவர்களே ஹீரோவா ஜெயிக்கும் போது என்னால முடியாதா..? என்று பேசி அதிர்ச்சியடைய வைக்கிறாராம்.
சில பேருக்கு ‘பட்டா’த்தான் புத்தி வரும், சரி ‘பட்டு’ வரட்டுமே…?.
Comments
Post a Comment