ஹன்சிகாவுக்கு வயது என்னவோ சின்ன வயதுதான். ஆனால் கொழுக்மொழுக் என்று நச் என்று!!!

16th of April 2014
சென்னை::ஹன்சிகாவுக்கு வயது என்னவோ சின்ன வயதுதான். ஆனால் கொழுக்மொழுக் என்று பெரிய பெண்ணைப்போல் இருந்தார். குறிப்பாக தமிழ்ப்படங்களில் நடிக்கத்தொடங்கிய ஆரம்ப நாட்களில் செம குண்டாக இருந்தார் ஹன்சிகா. அதனாலேயே சின்ன குஷ்பூ என்றெல்லாம் மீடியாக்களில் அவருக்கு அடைமொழி கொடுத்தார்கள்.

இந்நிலையில் உடம்பு வெயிட் போட்டுக் கொண்டேபோக, சட்டென ஒரு முடிவு எடுத்தார் ஹன்சிகா. அதாவது உடனடியாய் உடம்பைக்குறைக்க வேண்டும் என்பதே அவர் எடுத்த அவசர முடிவு. அதன்படி, தீயா வேலை செய்யணும் குமாரு, பிரியாணி படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சி காரணமாக அநியாயத்துக்கு உடல் இளைத்துப்போய் மெலிந்து காணப்பட்டார்.

உடல் எடையைக் குறைத்த ஹன்சிகாவை சக நட்சத்திரங்கள் பலர் ஆச்சர்யப்பட்டு பாராட்டினாலும், சிலர் எச்சரிகையும் செய்தனராம். இப்படி தடாலடியாய் உடல் எடையைக் குறைப்பது ஆபத்து என்று அட்வைஸ் செய்திருக்கிறார்கள். எனவே, டய்ட் கட்டுப்பாடுகளை கொஞ்சம் தளர்த்திய ஹன்சிகா தற்போது சற்று எடை கூடி... குண்டும் இல்லை, ஒல்லியும் இல்லை என நடுத்தரமாக பார்க்க நச் என்று இருக்கிறார்...

Comments