அஜித்தின் வெளிப்படையான பேச்சு, விஜய்யின் அமைதி : ரஜினி சொன்ன ரகசியம்!!!

15th of April 2014
சென்னை::ஜித்தின் வெளிப்படையான பேச்சும், விஜய்ய்யின் அமைதியும் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்றார் நடிகர் ரஜினிகாந்த்...
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த்தின் பேட்டி இன்று ஜெயா டிவியில் ஒளிபரப்பானது. நடிகர் விவேக் பேட்டி கண்ட அந்த நிகழ்ச்சியில்  ‘கோச்சடையான்’ படத்தையும் தாண்டி அவரது தனிப்பட்ட வாழ்க்கை, திரையுலக வாழ்க்கை, ரசிகர்கள், ஆன்மீகம் என்று பல விஷயங்களை மனம் திறந்து பேசினார் ரஜினி.

அப்போது அவரிடம் விஜய்- அஜித் இரண்டு பேருமே உங்களை ஒரு ரோல் மாடலாக எடுத்துக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட அவர்களிடம் உங்களுக்கு எது பிடிக்கும் என்று கேட்டார் விவேக்.
அதற்கு பதிலளித்த ரஜினி “அஜித்திடம் எனக்கு அவருடைய ஒளிவுமறைவற்ற பேச்சும், தைரியமும் ரொம்ப பிடிக்கும், விஜய்யிடம் அவரிடம் இருக்கும் அமைதி ரொம்ப ரொம்ப பிடிக்கும், படப்பிடிப்பில் கூட அவர் அமைதியை கடைபிடிக்கிறார். இப்படிப்பட்ட சில நல்ல குணங்கள் அபூர்வமாகத்தான் சிலரிடம் இருக்கும். அவைகளை விஜய் அஜித் இருவரிடமும் நான் பார்க்கிறேன்’’ என்று கூறினார் ரஜினி..
.

Comments