ஹேப்பி பர்த்டே நந்திதா!!!

30th of April 2014
சென்னை::இன்று கவனிக்கத்தக்க வகையில் தமிழ்சினிமாவில் விறுவிறுவென வளர்ந்து வருபவர் ‘அட்டகத்தி’ நந்திதா. ‘அட்டகத்தி’ யாருக்கு புகழ் வெளிச்சம் தந்ததோ இல்லையோ, ‘தெற்றுப்பல்’ அழகி நந்திதாவுக்கு ஒரு தெளிவான பாதையை போட்டு கொடுத்துவிட்டது.
 
அதன்பிறகு வந்த படங்களில் ‘எதிர் நீச்சல்’ இவரது நடிப்பை பறைசாற்றியது என்றால், இன்னொரு பக்கம் ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ என விஜய்சேதுபதி தந்த விளம்பரம் இன்று ரசிகர்கள் அனைவரின் மனதிலும் இவரை நன்றாக பதிய வைத்துவிட்டது.
 
தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் ‘முண்டாசுபட்டி’, விஜய் சேதுபதியுடன் ‘இடம் பொருள் ஏவல்’, பரத்துடன் ‘ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி’ என கைவசம் கலர்ஃபுல்லான படங்களை வைத்திருக்கிறார்.
 
இன்று பிறந்தநாள் காணும் நந்திதாவுக்கு poonththalir-kollywood தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது....
 

Comments