ராதிகா ஆப்தேவிடம் சில்மிஷம் செய்து வாங்கி கட்டிகொண்ட அஜ்மல்?!!!

13th of April 2014
சென்னை::தமிழில் அஞ்சாதே, கோ உள்பட பல படங்களில் நடித்தவர் அஜ்மல். தற்போது வெற்றிச்செல்வன், கதிர்வேல், உலா ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் வெற்றிச்செல்வன் படத்தில் அஜ்மல்-ராதிகா ஆப்தே இருவரும் ஜோடி சேர்ந்து நடித்து வந்தனர்.
 
இந்த படம் நீண்ட காலமாக தயாரிப்பில் உள்ளது, படப்பிடிப்பு இன்னும் நீண்டுகொண்டே செல்ல என்ன காரணம்? என்று விசாரித்தால், படப்பிடிப்பில் நடந்த ஒரு தகரறே காரணம் என சொல்லப்படுகிறது.
 
அது என்ன தகராறு என்று விசாரித்ததில் கிடைத்த தகவல் ஒருநாள் அஜ்மல், ராதிகா ஆப்தே சம்பந்தப்பட்ட ஒரு கிளுகிளுப்பு காட்சி படமாக்கப்பட்டதாம். அப்போது உணர்ச்சிவசப்பட்ட அஜ்மல் கொஞ்சம் ஓவராகி, ராதிகா ஆப்தேவிடம் சில்மிஷம் செய்துவிட்டாராம். இதனால் டென்சனான ராதிகா ஆப்தே, ஆங்கிலத்தில் அவரை கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டு ஸ்பாட்டை விட்டு வெளியேறி விட்டாராம் . இதனால் வெறுப்படைந்த ராதிகா ஆப்தே படப்பிடிப்பில் கலந்துகொள்ள மறுக்கிறாராம். இனி அஜ்மலுடன் நான் நடிக்க மாட்டேன் என்றும் கூறிவருகிறாராம்.
 
அதனால், எப்படி மீதம் உள்ள காட்சிகளை முடிப்பது எப்போது படத்தை வெளியிடுவது என்று படக்குழுவினர் ஆலோசித்து கொண்டிருக்கிறார்களாம்.::

Comments