பெண் மானேஜரை நியமித்த ஸ்ருதிஹாசன்!!!

6th of April 2014
சென்னை::நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்திப்படங்களிலும் நடித்து வருகிறார். நடிகையாய் இவர் அறிமுகமானது லக் என்ற ஹிந்திப் படத்தில்தான். தொடர்ந்து அனகனக ஓ தீருடு என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார். ஹிந்தியிலும் சரி, தெலுங்கிலும் சரி ஸ்ருதி நடித்த பல படங்கள் ப்ளாப்பாகி இருக்கின்றன. ஆனாலும், பாலிவுட், மற்றும் டோலிவுட்டில் அவருக்கு வரவேற்பு கொஞ்சம் கூட குறையவே இல்லை. மாறாக இரண்டு மொழிகளிலும் படங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அதனால்தான் தமிழ்ப்பட வாய்ப்புகள் தேடி வந்தும் அவரால் நடிக்கவில்லை.
 
மூன்று மொழிகளில் நடிப்பதால் ஸ்ருதிக்கு இன்னொரு பிரச்சனையும் இருந்தது. தமிழுக்கு ஒரு மானேஜர், தெலுங்குக்கு ஒரு மானேஜர், ஹிந்திக்கு ஒரு மானேஜர் என மூன்று மானேஜர்களை வைத்திருந்தார். அதனால் ஏகப்பட்ட பிரச்சனைகள். தமிழ் மானேஜர் கொடுத்த கால்ஷீட்டில், தெலுங்கு மானேஜர் தெலுங்குப் படத்துக்கு டேட் கொடுத்துவிட, படாதபாடுவிட்டாராம் ஸ்ருதி. இதுபோல் சம்பவங்கள் நடக்க அண்மையில் அதிரடி முடிவு ஒன்றை எடுத்தார்.
 
தமிழ், தெலுங்குப் படங்களுக்காக நியமிக்கப்பட்ட மானேஜர்களை நீக்கியதுதான் அந்த அதிரடி முடிவு. தற்போது தனது கால்ஷீட் விவகாரங்களை கவனிக்க ஒரேயொரு மானேஜரை மட்டும் வைத்துக் கொண்டிருக்கிறார் ஸ்ருதி. அவரது பெயர்..ஷோபா.
 
நடிகைகளிலேயே பெண் மானேஜர் வைத்திருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்தான்..…

Comments