ஸ்ருதி ஹாசனின் தங்கைக்கு ஓர் கீதம்! தனுஷுக்கு ஜோடியாக அக்ஷரா ஹாசன்!!!: ஸ்ருதிஹாசனை அழைத்து கண்டித்த இயக்குநர் ஹரி!!!
16th of April 2014
சென்னை::ராஞ்சனா வெற்றியைத் தொடர்ந்து தனுஷ், பால்கி இயக்கும் இந்திப் படம் ஒன்றில் நடிக்கிறார்.
இதில் தனுஷுக்கு ஜோடியாக அக்ஷரா ஹாசன் அறிமுகமாகிறார். இவர்களுடன்
முக்கிய வேடம் ஒன்றில் அமிதாப்பச்சன் நடிக்கிறார். தனுஷ் இந்த படத்தில்
வாய்பேச முடியாதவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். படத்திற்கு இளையராஜா
இசையமைக்க பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்திற்காக இளையராஜா இசையில் ஸ்ருதி ஹாசன் ஒரு பாடலை
பாடியிருக்கிறார். சமீபத்தில்தான் இந்தப் பாடலுக்கான ஒலிப்பதிவை சென்னையில்
நடத்தி முடித்திருக்கிறார்கள்.
இளையராஜா இசையில் தனது தங்கைக்காக பாடியதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய '3' படத்தில்
தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ருதி ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ருதிஹாசனை அழைத்து கண்டித்த இயக்குநர் ஹரி!!!
இளம் இயக்குநர்களில் கண்டிப்புக்குப்பேர்போனவர் ஹரி. எப்பேற்பட்ட முன்னணி
ஹீரோவாக இருந்தாலும் சரி..சொன்ன நேரத்துக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்க
வேண்டும். இல்லை என்றால் முகத்துக்கு நேராகவே கடுப்படித்துவிடுவார். சில
வருடங்களுக்கு முன்பு, சிம்புவை வைத்து கோவில் என்ற படத்தை இயக்கியபோது
அநியாயத்துக்கு டார்ச்சர் கொடுத்தார் சிம்பு.
சொன்ன நேரத்துக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வராமல் ஹோட்டல் ரூமிலேயே இருப்பது. உதவி இயக்குநர்கள் கூப்பிட்டால் அவர்களை கெட்டவார்த்தைகளால் திட்டுவது என்று ரொம்பவே டார்ச்சர் செய்ய, கடுப்பான ஹரி அடுத்த நாள் முதல் சிம்புவை படப்பிடிப்புக்கு அழைக்கவே இல்லை. அவருக்குப் பதிலாக டூப்பை வைத்து ஷூட் பண்ண ஆரம்பித்துவிட்டார். அதன் பிறகு நல்லபிள்ளையாய் நடந்து கோவில் படத்தை முடித்துக்கொடுத்தார் சிம்பு.
அது சரி..இப்ப என்னத்துக்கு இந்த ப்ளாஷ்பேக்?
விஷால் ஸ்ருதிஹாசன் நடிக்கும் பூஜை படத்தை இயக்குகிறார் ஹரி. இந்தப் படத்தின் பப்ளிசிட்டிக்காக சமீபத்தில் போட்டோசெஷன் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன் முக்கால்வாசி நேரம் மொபைல்போனை நோண்டிக்கொண்டே இருந்தாராம். ட்விட்டரில் ஸ்டேட்டஸ்போடுவது, போனில் மணிக்கணக்கில் பேசுவது என்று ஸ்ருதிஹாசன் பிஸியாக இருந்தாராம். அதனால் போட்டோசெஷன் திட்டமிட்டபடி நடைபெறவில்லை. ஒருநாளில் முடிய வேண்டிய வேலை அடுத்தநாள்வரை நீண்டிருக்கிறது. அதனால் கடுப்பான இயக்குநர் ஹரி, ஸ்ருதிஹாசனை அழைத்து என்னுடைய படத்தில் நடிக்கும்போது மொபைல் போனையே ஆன் பண்ணக்கூடாது என்று கண்டித்து சொல்லிவிட்டாராம்.....

Comments
Post a Comment