13th of April 2014
சென்னை::ஒரு காலத்தில் மலையாள சினிமாவின் பொக்கிஷமாக இருந்தவர் கவர்ச்சி நடிகை
ஷகீலா. அவர் நடித்தால் அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்ற நிலை இருந்தது.
அதன்காரணமாக, மோகன்லால், மம்மூட்டி போன்ற மெகா நடிகர்களின் படங்களையே,
ஷகீலா படம் ரிலீசாகிற நேரத்தில் வெளியிட பயந்து கிடந்தார்கள்.
ஆனால், சமீபகாலமாக ஷகீலாவுக்கு பழைய கிரேஸ் இல்லை, என்றாலும், இன்னும் தனக்கே உரிய பாணியில் சில படங்களில் அவ்வப்போது கவர்ச்சிகரமாக நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். இந்நிலையில், தற்போது காதல் பஞ்சாயத்து என்ற படத்தில் சிங்கமுத்துவுடன் சேர்ந்து காமெடி டீம் அமைத்திருக்கிறார் ஷகீலா. அதோடு, அவருக்கு ஈடு கொடுத்து காமெடியாகவும் நடித்திருக்கிறார்.
இதையடுத்து, இனி கிளாமர் நடிப்பை ஏறக்கட்டிவிட்டு, காமெடிக்கு மாற சிலர் ஷகீலாவை கேட்டுக்கொண்டபோது, தடாலடியாக மறுத்து விட்டாராம். ஷகீலா என்றாலே செக்ஸியான நடிகை என்கிற இமேஜ் உருவாகி விட்டது. அந்த இமேஜை கருத்தில் கொண்டுதான் பல டைரக்டர்கள் என்னை புக் பண்ணுகிறார்கள் அதனால், என்னதான் காமெடி கேரக்டகளில் நடித்தாலும், எனக்கே உரிய செக்ஸியான நடிப்பை வெளிப்படுத்தியே தீருவேன் என்று தனது முடிவை திட்டவட்டமாக சொல்லி விட்டாராம் ஷகீலா.

Comments
Post a Comment