11th of April 2014
சென்னை::தெய்வத்திருமகள் படத்தில் நடித்தபோது அப்படத்தை இயக்கிய
ஏ.எல்.விஜய்க்கும், அமலாபாலுக்குமிடைடையே காதல் பூ பூத்தது. ஆனால் அப்போதே
அதுபற்றிய செய்திகள் கிசுகிசுத்தபோது, நாங்கள் நல்ல நணபர்கள்.நட்பை காதல்
என்று சொல்லி கொச்சைப்படுத்தாதீர்கள் என்று கோரசாக குரல் மறுப்பு
தெரிவித்தார்கள்.
ஆனபோதும், அவர்களைப்பற்றிய
காதல் செய்திகள் தொடர்ந்து புகைந்து கொண்டேயிருந்தது. இந்நிலையில்,
அசைவம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், மேடையில் பேசிய பலரும்
டைரக்டர் விஜய்யையும், அமலாபாலையும் பார்த்தபடி சீக்கிரமே திருமணம் செயது
கொள்ள வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டனர்.
அதையடுத்து
ஜூன் மாதத்தில் டைரக்டர் விஜய்-அமலாபால் திருமணம் நடைபெறவிருக்கும்
செய்தியை மீடியாக்கள் வெளியிட்டன. அதனால், இனியும் மீடியாக்களை ஏமாற்ற
முடியாது என்பதால், இப்போது டைரக்டர் விஜய் வெளிநாடு சென்றிருக்கிறார்.
அதனால் அவர் வந்ததும் நல்ல செய்தியை வெளியிடுகிறோம் என்று உடனடியாக
அறிவித்தார் அமலாபால்.
இந்த நிலையில், தற்போது
சென்னையிலுள்ள ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள மேயர் ராமநாதன் திருமண
மண்டபத்தை டைரக்டர் விஜய்-அமலாபால் திருமணத்துக்காக புக் பண்ணி
வைத்திருப்பதாக தற்போது இன்னொரு செய்தி பரவியுள்ளது. அதனால் டைரக்டர்
விஜய் வெளிநாட்டில் இருந்து வந்ததும் மங்களகரமான செய்தி சொல்வார் என்று
எதிர்பார்க்கலாம்...
Comments
Post a Comment